உள்ளூர் செய்திகள்

நெடுஞ்சாலை விரிவாக்க திட்டப்பணிகளை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

சங்ககிரி அருகே நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

Published On 2023-05-21 07:26 GMT   |   Update On 2023-05-21 07:26 GMT
  • சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
  • இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் பல்வேறு சாலை திட்டப்ப ணிகள் நடைப்பெற்று வருகிறது. இப்பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத்துறை மூலம் சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒப்பந்த தாரர்க ளிடம் சாலை பணிகளையும், புறவழிச் சாலை பணிகளை யும், பாலப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கி னார்.

இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர் தாரகேஸ்வ ரன், உதவி பொறியாளர் மற்றும் சாலை பணியின் ஒப்பந்ததாரர்கள் மேற்பார்வை ஆலோசகர்க ளும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News