உள்ளூர் செய்திகள்
சுப்பிரமணியருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
- சுப்பிரமணியர் மற்றும் சூரபத்மன் ஆகியோர் வீதியுலா வந்து, சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
திருவையாறு:
தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தனிச் சன்னிதி கொண்டுள்ள சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹார விழா நேற்றிரவு நடந்தது.
இதனை முன்னிட்டு சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பின்னர் அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து சுப்பிரமணியர் சுவாமி மற்றும் சூரபத்மன் ஆகியோர் வீதி உலா வந்து, கீழவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
புஷ்யமண்டபத்துறை பாலமுருகன் சுவாமி மற்றும் சூரபத்மன் ஆகியோர் நேற்று மாலை வீதிஉலா வந்து வடக்கு மடவிளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.