உள்ளூர் செய்திகள்

சுகாதார பணியாளர்கள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சுகாதார பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

Published On 2023-08-16 15:09 IST   |   Update On 2023-08-16 15:09:00 IST
  • 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
  • பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள், புது சீருடைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் முனிசிபல் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நலச்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் (பொது) ஓய்வு பெரியராஜ் சுதந்திர தின கொடியினை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொறியாளர் முருகேசன் நினைவு அறக்கட்டளை சார்பில் மணிகண்டன் குடும்பத்தினர் முனிசிபல் காலனி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்று 10 -ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சுகாதார பணிகளில் தன்னலமற்று சேவை செய்து வரும் முனிசிபல் காலனி பகுதி ஆறு சுகாதார பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உபகரணங்கள், புது சீருடைகள், பரிசுகள் வழங்கப்பட்டன

முடிவில் நலச் சங்க உதவி செயலாளர் அமுதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News