உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர் திடீர் தற்கொலை

Published On 2022-12-08 14:41 IST   |   Update On 2022-12-08 14:41:00 IST
  • சற்று மனநலம் பாதிக்கப்பட்டு  திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்து வந்தார்.
  • வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் விஜய பாஸ்கர் தூக்கில் பிணமாக ெதாங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சி 9 -வது வார்டு பகுதியில் உள்ள பாட்டப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம், லட்சுமி தம்பதியரின் மகன் விஜயபாஸ்கர் (வயது 47).

இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு  திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்து வந்தார். அதே நிலையில் இருதய நோயால் அவதிப்பட்டும் வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோர், உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் விஜய பாஸ்கர் தூக்கில் பிணமாக ெதாங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்து தெரியவந்தது. இதுபற்றி விஜய பாஸ்கரின் தாய்

லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News