போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பொது கிணறு மராமத்து பணிக்கு எதிர்ப்பு சித்தையன்கோட்டையில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
- புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் திருவிழா நடைபெறும்.
- எனவே கிணற்றை சுத்தம் செய்து மராமத்து பணியில் மேற்குதெரு பொதுமக்கள் ஈடுபட்டனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே சித்தையன்கோட்டையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் திருவிழா நடைபெறும்.
இதற்காக சாமி அழைத்தல், கரகம் ஜோடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 100 ஆண்டுகள் பழமையான கிணற்றில் தண்ணீர் எடுத்து வருவார்கள். தற்போது அந்த கிணறு பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே கிணற்றை சுத்தம் செய்து மராமத்து பணியில் மேற்குதெரு பொதுமக்கள் ஈடுபட்டனர்.
சித்தையன்கோட்டையை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என சித்தையன்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். இந்த பணியை தடுத்து நிறுத்த கூடாது என எதிர்தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி னார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து ெசன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.