உள்ளூர் செய்திகள்

நெல்லையில் திடீர் சாரல் மழை

Published On 2023-01-23 09:28 GMT   |   Update On 2023-01-23 09:28 GMT
  • நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்த அளவே பெய்ததால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லை.
  • இன்று அதிகாலை நெல்லை மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது.

நெல்லை:

வடகிழக்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் குறைந்த அளவே பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லை.

பனிப் பொழிவு

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. மாலை 7 மணிக்கு தொடங்கும் பனிப் பொழிவு காலை 7 மணிவரை இருக்கிறது.

இதனால் காலையில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சாரல் மழை

இந்நிலையில் இன்று அதிகாலை நெல்லை மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பிற்பகலில் டவுன், சந்திப்பு, வண்ணார் பேட்டை, பாளை உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த திடீர் சாரல் மழையால் பொது மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News