உள்ளூர் செய்திகள்
பூத வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி.
பூத வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி
- ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.
- கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பூக்காரத்தெ ருவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
தஞ்சை ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் மூன்றாம் நாளான நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமி பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.