உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூர் பஸ் நிலையத்தை மேம்படுத்த ஆய்வு

Published On 2023-03-22 10:19 GMT   |   Update On 2023-03-22 10:19 GMT
  • பட்ஜெட் கூட்டத்தில் மூன்று பணிமனைகள் ரூ.1,347 கோடி செலவில் மேம்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பூந்தோட்ட பள்ளி தெருவில் உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் அஜாக்ஸ் அருகே விளையாட்டு திடல் அமைப்பதற்கான இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

சென்னை:

திருவொற்றியூர் பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம், ஐகோர்ட்டு, வேளச்சேரி, கோயம்பேடு போன்ற பல்வேறு இடங்களுக்கு மாநகரப் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தில் திருவொற்றியூர், தாம்பரம் சைதாப்பேட்டை ஆகிய மூன்று பணிமனைகள் ரூ.1,347 கோடி செலவில் மேம்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை திட்ட அதிகாரி ரவிக்குமார், கே.பி.சங்கர் எம் எல் ஏ மற்றும் அதிகாரிகள் நேற்று திருவொற்றியூர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது பஸ் நிறுத்துவதற்கான இடம், டிரைவர் மற்றும் கண்டக்டர் தங்கும் அறை பயணிகளுக்கான கழிவறை அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி தெருவில் உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் அஜாக்ஸ் அருகே விளையாட்டு திடல் அமைப்பதற்கான இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News