உள்ளூர் செய்திகள்

கல்லூரி முதல்வர் சித்ரா

ஆத்தூர் அரசு கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையால் மாணவர்கள் நலன் பாதிப்பு கல்லூரி முதல்வர் பரபரப்பு புகார்

Published On 2022-09-15 10:11 GMT   |   Update On 2022-09-15 10:11 GMT
  • இந்த கல்லூரி 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் 3500 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
  • இந்த கோவில் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கோட்டை பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் 3500 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் உள்ளன.

இந்த கல்லூரியின் அருகே அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் வடசென்னிமலை பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவில் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடையை அகற்றக்கோரி கல்லூரி முதல்வர் சித்ரா மாவட்ட கலெக்டரிடம் 2 முறை புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கல்லூரிக்கு அருகாமையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு வரும்போதும், செல்லும் போதும் மது அருந்திவிட்டு வருகிறார்கள். சில மாணவர்களின் இந்த ஒழுங்கீனத்தால் பல மாணவர்கள் கெட்டுப் போகிறார்கள்.

இதனால் அடிக்கடி கல்லூரி மாணவர்களுடைய சமூகப் பிரச்சினை எழுந்து வருகிறது. மேலும் பஸ் நிலையத்தில் இருந்து மாணவ-மாணவிகள் பஸ் வசதி இல்லாததால் நடந்து கல்லூரிக்கு வருகின்றனர். அப்போது மாணவிகளை அந்த பகுதியில் மது அருந்திவிட்டு வருபவர்கள் கிண்டல், கேலி செய்கிறார்கள்.எனவே கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேருந்து இயக்கி தர வேண்டும் என அந்த புகார் மனுவில்அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகஅவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

எங்கள் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையினால் மாணவர்களின் நலன் பெரும் பாதிக்கப்படுகிறது. அதனால் இந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் பஸ் நிலையத்திலிருந்து மாணவ மாணவிகள் நீண்ட தூரம் நடந்து கல்லூரிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நடந்துவரும் பெண்களிடமும் மது அருந்தியவர்கள் கிண்டல் கேலி செய்து அதிக பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள். எனவே அரசு இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News