உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட வாலிபால் சங்க தலைவர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் நகர பஸ் நிலையத்தில் ஆக்கி போட்டி நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்த காட்சி.
தருமபுரியில் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி நேரடி ஒளிபரப்பை கண்டுகளித்த மாணவர்கள்
- நேரடி ஒளிபரப்பினை கடந்த 3-ந் தேதி அன்று தருமபுரி நகர பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
- பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் போட்டிகளை கண்டு ரசித்தனர்.
தருமபுரி,
7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி கோப்பை போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதன் நேரடி ஒளிபரப்பினை கடந்த 3-ந் தேதி அன்று தருமபுரி நகர பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் பி.சுப்பிரமணி, தருமபுரி மாவட்ட வாலிபால் சங்க தலைவர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கொரியா மற்றும் சீனா அணிகளுக்கிடையிலான நடந்த ஆக்கி போட்டியை பஸ் நிலையத்தில் உள்ள பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்தனர்.
மேலும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் போட்டிகளை கண்டு ரசித்தனர்.