உள்ளூர் செய்திகள்
மாணவர்கள் பனை விதைகள் நட்ட போது எடுத்த படம்.
கடையத்தில் பனை விதைகள் நட்ட மாணவர்கள்
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடையம் அணைக்கட்டு சாலையோரப் பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டது.
- தென்பத்து குட்டிகுளக்கரைகளில் இயற்கையான சூழலில் வளர்ந்து வரும் பனங்கன்றுகளை பார்த்துக்கொண்டே நடந்தனர்.
கடையம்:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடையம் அணைக்கட்டு சாலையை பயன்மிக்க பனைமரச்சாலையாக்கும் பணியில் ஜம்பு ஆறு பாலத்திலிருந்து தென்பத்து குளம் வரையிலான சாலையோரப் பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டது. அத்தோடு கடந்த ஆண்டுகளில் பனை விதைகள் நடுகை செய்யப்பட்ட தென்பத்து குட்டிகுளக்கரைகளில் இயற்கையான சூழலில் வளர்ந்து வரும் பனங்கன்றுகளை பார்த்துக்கொண்டே நடந்தனர்.
பள்ளி மாணவர்கள் ஜெப்வின், விஷ்ணு,கவின், மெர்வின், செர்வின் மற்றும் பல கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை பனையாண்மை மற்றும் சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் பாமோ ஒருங்கிணைத்திருந்தார்.