உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மாணவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அமைச்சர் உதயநிதியை பார்த்து ஓடோடி வந்த மாணவர்கள்; புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்

Published On 2023-06-22 15:16 IST   |   Update On 2023-06-22 15:16:00 IST
  • எங்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும், அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும்.
  • பெற்றோர்கள் தேடுவார்கள் உடனடியாக வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக அமைச்சர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தபோது தன்னை பார்த்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கையசைத்துள்ளார்.

இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள் அமைச்சர் எங்கே போகிறார் என்று விசாரித்துவிட்டு உதயநிதி தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆய்வுக் கூட்டம் நடக்கும் கூட்ட அரங்க வாயிலுக்கு வந்தனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், திமுகவினர் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டபோது நாங்கள் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் என்றும், எங்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என உற்சாகமாக கூறினர்.

வீட்டில் பெற்றோர்கள் தேடுவார்கள் என்று மாணவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறியும் கேட்காமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உதயநிதியை பார்ப்பதற்காக காத்திருந்தனர். தொடர்ந்து ஆய்வு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னைப் பார்ப்பதற்காக காத்திருந்த மாணவர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் உற்சாகமடைந்த மாணவர்கள் அமைச்சருக்கு வரேன் சார் என கை கொடுத்து விட்டு மகிழ்ச்சியாக அப்பகுதியில் இருந்து சென்றனர்.

Tags:    

Similar News