பஸ்வசதி கேட்டு சீருடையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாணவ-மாணவிகள்.
பஸ்வசதி கேட்டு பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் கலெக்டரிடம் புகார் மனு
- பொம்மன்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்ட த்திற்கு வந்து மனு அளித்தனர்.
- பஸ்வசதி கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள நல்லபொம்மன்பட்டியில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவி கள் தேவிநாயக்கன்பட்டி மற்றும் காசிபாளையம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றே கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு காலை 8.30 மணிக்கு ஒரு அரசு பஸ் வருகிறது. அந்த பஸ்சில்தான் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். அதன் பிறகு பஸ் இல்லாததால் மாலை யில் பள்ளி முடிந்து 5 கி.மீ. தூரம் நடந்தே மாணவர்கள் வீட்டிற்கு வருகின்றனர். இதனால் 7 மணிக்கு வீட்டிற்கு வரும் மாணவ-மாணவிகள் அதன் பிறகு வீட்டுப்பாடம் கூட எழுத முடியாமல் சோர்வுடன் தூங்கி விடுகின்றனர்.
கடந்த பல ஆண்டு களாகவே இதே சூழல் நிலவி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் கூட மினிபஸ் இயக்கப்பட்ட நிலையில் தற்போது காலையில் இயங்கும் ஒரே பஸ் மட்டுமே போக்குவரத்து சேவையாக உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் மாலையில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து நல்ல பொம்மன்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்ட த்திற்கு வந்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,
பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் இடையில் நின்று விடுகின்ற னர். பஸ் வசதி கேட்டு காந்திராஜன் எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி. ஆகி யோரிடமும் மனு அளித்து ள்ளோம். தற்போது மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு கொடு த்துள்ளோம். பஸ்வசதி கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.