உள்ளூர் செய்திகள்

போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.

வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2023-10-31 09:14 GMT   |   Update On 2023-10-31 09:14 GMT
  • 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக தகர கொட்டகை அமைக்கப்பட்டது.
  • போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கடந்த 1959-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இந்த பள்ளி 2 கட்டிடங்கள் மூலம் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பழுது காரணமாக இடிக்கப்பட்டது.

மீதம் இருந்த ஒரு கட்டிடம் கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை தினத்தின் போது மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதம் இல்லை.

இரண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர கொட்டகையில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் 63 பேரும் நெருக்கடியில் இருந்து வருகின்றனர்.

தற்போது மழை காலத்தில் சாரல் விழுவதால் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் செய்து வந்தனர்.

தகவறிந்து நேரில் வந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், காவல் ஆய்வாளர் காவேரி சங்கர் விரைவில் பள்ளி கட்டிடம் கட்டி தரப்படும் என உறுதி கூறினர்.

இருப்பினும் பெற்றோர்கள், மாணவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News