உள்ளூர் செய்திகள்

மாணவிகள் சிலம்பம் சுற்றிய காட்சி.

சிலம்பாட்ட போட்டியில் மாணவர்கள் சாதனை

Published On 2023-01-19 09:27 GMT   |   Update On 2023-01-19 09:27 GMT
  • 3 மணி நேர சிலம்பாட்ட நோபல் உலக சாதனை நிகழ்ச்சி
  • சிலம்பாட்ட ஆசிரியர் மோகன்குமார் தலைமை வகித்தார்.

குமாரபாளையம்:

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் சிலம்பாட்டம் பயிற்சி பெற சிறுவர், சிறுமியர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சிலம்பாட்ட நிகழ்ச்சியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 3 மணி நேர சிலம்பாட்ட நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 102 மாணவ, மாணவியர் பங்கேற்று தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். சிலம்பாட்ட ஆசிரியர் மோகன்குமார் தலைமை வகித்தார்.விடியல் பிரகாஷ், குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்- இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தனர். பா.ஜ.க. மாவட்ட பொது செயலாளர் வக்கீல் சரவணராஜன், குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன், தி.மு.க. நகர செயலாளர் செல்வம், இந்திய முதல் பெண் டாக்ஸி ஓட்டுநர் செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News