உள்ளூர் செய்திகள்

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி மாணவிக்கு பாராட்டு

Published On 2023-10-10 15:04 IST   |   Update On 2023-10-10 15:04:00 IST
  • பெரியார் பல்கலைக்கழகத்தில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
  • பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்பட்டது.

ஓசூர், 

 இராமலிங்கர் நற்பணி மன்றமும், ஏவிஎம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 56-ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழாவை முன்னிட்டு,சேலம் மண்டல அளவில் பெரியார் பல்கலைக்கழகத்தில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவற்றுள் 'ஒளி வழிபாட்டில் ஓங்கும் தத்துவம்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சேலம் மண்டல அளவில் ராமலட்சுமி (மூன்றாம் ஆண்டு கணிதம்) மூன்றாம் பரிசு பெற்றார்.

போட்டிகளில். வெற்றி பெற்ற மாணவ-மாணவி யர்களுக்கு சென்னை, மயிலாப்பூர், ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் குன்றக்குடி குருமகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ராமலட்சுமியை, எம்ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி தமிழாய்வுத்துறை தலைவர் லட்சுமி மற்றும் தமிழாய்வுத்துறைப் பேராசி ரியர்களும் பாராட்டி வாழ்த்தினர்.

Similar News