உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை

Published On 2022-11-25 13:49 IST   |   Update On 2022-11-25 13:49:00 IST
  • சங்கராபுரம் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
  • சம்பவத்தன்று சுவாதி பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சுதாகர் மகள் சுவாதி (17). தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சுவாதி கடந்த 2 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து வந்துள்ளாா். சம்பவத்தன்று சுவாதி பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறு த்தியதாக கூற ப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுவாதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விஷத்தை எடு த்து குடித்து விட்டார்.

இதில் மயங்கி விழுந்த சுவாதியை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மோட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சுவாதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைகேட்ட பெற்றோர், உறவினர்கள் சுவாதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News