உள்ளூர் செய்திகள்

ஆட்டோ மூலம் மாணவர்கள் பள்ளியில் சேர்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொரடாச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பணி

Published On 2023-05-19 08:46 GMT   |   Update On 2023-05-19 08:46 GMT
  • குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.
  • பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர்:

கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான எல்.கே.ஜி. வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை அந்தந்த குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.

இந்த மாணவர் சேர்க்கை நிகழ்வில் 106 தன்னார்வ–லர்கள் கலந்து கொண்டு எல்கேஜி வகுப்பில் 113 மாணவர்களும், ஒன்றாம் வகுப்பில் 382 மாணவர்களும் மற்ற எல்லா வகுப்புகளையும் சேர்த்து மொத்தம் 706 மாணவர்களையும் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

மாணவர் சேர்க்கை நிகழ்வில் கொரடாச்சேரி வட்டார கல்வி அலுவலர்கள் வீ.விமலா, கி.சுமதி, ஆசிரியர் பயிற்றுநர் க.சரவணன், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜி.தியாகு, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அரசு பள்ளியில் பயில்வதால் கிடைக்ககூடிய பயன்பாடுகள் குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மணக்கால் , எருக்காட்டூர் பகுதிகளில் ஆட்டோ விளம்பரம் மற்றும் மாணவர் விழிப்புணர்வு பேரணி மூலம் மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது.

Tags:    

Similar News