உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் பரபரப்பு: வீடு புகுந்து மாணவனை கடத்தி ரூ. 10 லட்சம்கேட்டு மிரட்டல் 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

Published On 2022-06-26 13:42 IST   |   Update On 2022-06-26 13:42:00 IST
  • விழுப்புரத்தில் பரபரப்பு வீடு புகுந்து மாணவனை கடத்தி ரூ. 10 லட்சம்கேட்டு மிரட்டல் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
  • விசாரணையில் சூர்யகுமாரை திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தா, மாரி உள்ளிட்ட 5 பேர் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரை சேர்ந்தவர் சசிகுமார். அவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் சூர்யகுமார் (வயது 19). இவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று வீட்டில் இருந்தபோது திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் விழுப்புரம் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் சூர்யகுமாரை நைசா பேசி அழைத்து சென்றனர்.

அப்போது 5 பேர் கும்பல் சூர்யகுமார் தாயாரிடம் செல்ேபானில் தொடர்பு கொண்டு உங்கள் மகனை கடத்தி வந்து உள்ளோம். அவனை விடுவிக்க வேண்டும்என்றால் ரூ. 10 லட்சம் தரவேண்டும். அதனை மீறி போலீசில் தெரிவித்தால் உனது மகனை கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு துண்டித்து விட்டனர்.பதறி போன கிருஷ்ணவேணி இது பற்றி விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் சூர்யகுமாரை திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தா, மாரி உள்ளிட்ட 5 பேர் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.அவர்கள் பேசிய செல்ேபான் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த 5 பேரும் விழுப்புரம் அருகே வீரன் கோவில் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே ேபாலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த 5 பேரும் அங்கிருந்து சூர்யாகுமாருடன் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/   

Tags:    

Similar News