உள்ளூர் செய்திகள்

ேவளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 6,512 டன் உரங்கள் இருப்பு

Published On 2023-06-03 10:04 GMT   |   Update On 2023-06-03 10:04 GMT
  • 13 ஆயிரத்து 463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 26-ந் தேதி வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட நீடித்த நிலையான மேலாண்மை இயக்கம் கூட்டுப் பண்ணையத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டங்களின் மூலம் 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூ.359.16 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 13463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் கூட்டுறவு துறை மூலம் 2023-24-ம் ஆண்டுக்கு ரூ.456.65 கோடி கடன் வழங்கி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஏப்ரல் ஒன்று முதல் மே 26 வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு தேவையான 6512.07 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மண்டல இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News