உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-03-12 07:16 GMT   |   Update On 2023-03-12 07:16 GMT
  • தமிழகத்தில் இருந்து சட்டத்தை மீறி கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
  • வருங்கால சந்ததியினருக்கு கனிமவளங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.

கடையம்:

முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் தமிழ கத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விதிகளையும், மோட்டார் வாகன சட்டத்தையும் மீறி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளை சர்வே செய்ய வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான குவாரிகள் சட்ட விதிகளை மீறி தான் செயல்பட்டு வருகிறது. தற்போது அரசு கனிமவள கொள்ளையை தடுக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது கனிமவள கடத்தலை தடுக்க உதவாது. சாலை பாதுகாப்பு விதி களையும், மோட்டார் வாகன சட்டத்தையும், கனிமவள சட்டத்தையும் அரசு அதிகாரிகள் முறையாக கடைபிடித்தாலே கனிமவள கடத்தல் முற்றிலுமாக தவிர்க்கப்படும். மாநில எல்லையில் வருவாய்துறை, கனிமவளத்துறை, போக்கு வரத்துத்துறை, காவல்துறை செக்போஸ்டுகள் இருந்தும் கனிமவள கடத்தல் தொடர்கிறது.

அதிகனரக வாகனங்களில் விதிகளை மீறி அதிக பாரத்துடன் கனிமங்கள் ஏற்றி செல்வதால் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் சாலையில் பயணிக்கவே அச்சப்படு கின்றனர். கனிமவள கடத்தல் தொடருமானால் வருங்கால சந்ததியினருக்கு கனிமவளங்களே இல்லை என்ற நிலை இன்னும் 10 ஆண்டுகளில் உருவாகி, வருங்கால சந்ததியினர் வெளி மாநிலத்தில் கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

எனவே அரசு கனிமவள கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News