உள்ளூர் செய்திகள்

நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான பயிலரங்கம்

Published On 2023-07-21 15:07 IST   |   Update On 2023-07-21 15:07:00 IST
  • உதவிபேராசிரியை பார்வதிதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
  • சென்னை லைவ் வயர் கார்ப்பரேட் நிறுவன டெக் லீட் அணு பிரியன் செயல்முறை பயிலரங்கத்தை நடத்தினார்.

நெல்லை:

பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டு துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கம் கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா, கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கணினி பயன்பாட்டுத் துறை இயக்குனர் மற்றும் உதவிபேராசிரியை பார்வதிதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை லைவ் வயர் கார்ப்பரேட் நிறுவன டெக் லீட் அணு பிரியன் கலந்து கொண்டு 'புல் ஸ்டேக்கை பயன்படுத்தி க்ரட் ஆபரேஷன் மெர்ன்' என்ற தலைப்பில் செயல்முறை பயிலரங்கத்தை நடத்தினார். நிகழ்ச்சியில் நெல்லை லைவ்வைர் தொழில்நுட்பத் தலைவர் வரதராஜன், கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கணினி பயன்பட்டுத்துறை உதவிபேராசிரியை சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.

Tags:    

Similar News