உள்ளூர் செய்திகள்

மாநில கல்வி கொள்கை செயல்படுத்த திட்டம்: சேலம் உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு

Published On 2022-10-15 10:14 GMT   |   Update On 2022-10-15 10:14 GMT
  • தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
  • கல்விக் கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மண்டல அளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழு தீர்மானத்தின்படி மாநிலக் கல்விக் கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மண்டல அளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் வருகுற 28-ந்தேதி அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

இதுசார்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் மாநிலக் கல்விக் கொள்கை சார்பான தங்களது எழுத்து மூலமான கருத்துக்களை சேலம், கோட்டை, நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 19, 20-ந் தேதிகளில் தங்களது முழுமையான முகவரி மற்றும் செல்போன் விவரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News