உள்ளூர் செய்திகள்

வண்ணார்பேட்டையில் ஒரு வீட்டில் பொங்கல் தொகுப்பு ேடாக்கன் வழங்கப்பட்ட காட்சி

நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது: 4.87 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்குபொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்

Published On 2023-01-03 09:24 GMT   |   Update On 2023-01-03 09:24 GMT
  • பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.
  • மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 87 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

நெல்லை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ரூ.1,000 ஆகியவை வழங்கப்பட உள்ளன.

பொங்கல் பரிசு தொகுப்பு

இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்காக முன்கூட்டியே டோக்கன் வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

4.87 லட்சம் ரேசன் கார்டுகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் நெல்லை, பாளை, சேரன்மகாதேவி, அம்பை, மானூர், திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 8 தாலுகாக்களில் இன்று முதல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கினர்.

நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 87 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதுதவிர இலங்கை அகதிகள் சுமார் 658 பேருக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

வீடு வீடாக வினியோகம்

இந்த தொகுப்பானது மாவட்டம் முழுவதும் உள்ள 796 ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பை வருகிற 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் எனவும், கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்கினர். பெரும்பாலான கிராமப்பு றங்களில் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு நேரடியாக சென்று டோக்கன்களை பெற்றுக்கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மேற்பார்வையில் குடிமைப்பொருள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News