உள்ளூர் செய்திகள்

மழைநீர் தேங்கி கிடக்கும் சாலை பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

மழை நேரங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர்; பொதுமக்கள் அவதி

Published On 2023-09-01 09:06 GMT   |   Update On 2023-09-01 09:06 GMT
  • நேற்று மாலை பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.
  • அந்த வழியை பயன்படுத்துபவர்கள் மாற்று வழியில் சென்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை- நாகை சாலையில் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் ஆடக்கார தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள தார் சாலை வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து வருபவர்கள் கீழவாசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கும் , அங்கிருந்து இந்த சாலை வழியாக மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தினமும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இது தவிர பள்ளி ,கல்லூரி மாணவ- மாணவிகள் அதிகமானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளது. இதனால் மழை பெய்யும் போதெல்லாம் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி காணப்படும். இதனால் இந்த வழியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

நேற்று மாலை பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது. அப்போது பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டது. இதனால் அந்த வழியை பயன்படுத்துவர்கள் மாற்று வழியில் சென்றனர். மழை பெய்யும் நேரம் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் சாலையில் உள்ள பள்ளங்களை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படு கின்றனர்.

எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்ப டையில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

Tags:    

Similar News