உள்ளூர் செய்திகள் (District)

புனித தோமையார் ஆலய தேர்பவனி நடைபெற்றபோது எடுத்த படம்.

வள்ளியூர் அருகே புனித தோமையார் ஆலய தேர்பவனி

Published On 2023-07-03 08:40 GMT   |   Update On 2023-07-03 08:40 GMT
  • நேற்று 9-ம் திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
  • 10-ம் திருவிழாவான இன்று காலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் பிரபாகர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது.

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளம் புனித தோமையார் ஆலயம் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டும்தோறும் புனிதருக்கு திருவிழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு 1-ம் திருவிழா கடந்த 24-ந் தேதி மாலை அருட்தந்தை லூர்துசாமி கொடியை அர்ச்சித்து கொடியேற்றினார். பின்னர் மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலி, மாலை மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

நேற்று 9-ம் திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இரவு தேர்பவனி நடைறெ்றது. தேரில் புனித தோமையார் ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பக்தர்கள் நேர்ச்சையாக உப்பு, மிளகு தூவியும், பாடல்கள் பாடியும், வான வேடிக்கைகள் நிகழ்த்தியும் தேரை இழுத்துச் சென்றனர்.

தேர்திருவிழாவில் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். 10-ம் திருவிழாவான இன்று காலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் பிரபாகர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கமும், நற்கருணை ஆசிரும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் மற்றும் பண்டாரகுளம் பங்கு இறை மக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News