கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி.
ஸ்ரீ அங்காளம்மன் கோவில்மகா கும்பாபிஷேக விழா
- கோபுரத்தின் மீது உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
- கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெ ற்றது.
இதையொட்டி கடந்த 8-ம் தேதி கங்கா பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து வருதல். மங்கல இசை விக்ரஹம் ஆவாஹனம் ஆச்சாரய அழைப்பு பகவத் பிரார்த்தனை யஜமானர் சங்கல்பம் புண்யாவாசனம் உள்பட யாகங்கள் வளர்க்க ப்பட்டு அக்னி ஆராதனம் செய்யப்பட்டு கும்ப பிரதிஷ்டை நடைபெற்றது.
இதனையொட்டி நூதன விக்கிரஹம் பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்றுதலும், திருமஞ்சனம், அபிஷேகம், பூர்ணாகஹதி, யாகசாலை, ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் யாக சாலையில் இருந்து தீர்த்த குடத்தை தலையின் மீது எடுத்து கோபுரத்தின் மீது உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ அங்காளம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள் பாலி த்தார். இந்த விழாவை யொட்டி மாரண்டஅள்ளி சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். பக்தர்கள் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பான அன்னதானம வழங்கப்பட்டது.