உள்ளூர் செய்திகள்
பெருமாள் கோவிலில் வசந்த உற்சவ விழா
- வரதராஜ பெருமாளுக்கு வெட்டிவேர் பந்தல் அமைத்து சுகந்த பரிமல திவ்ய வஸ்துக்களுடன் வசந்த உற்சவ விழா தொடங்கியது.
- வர மகாலட்சுமி சமேத பரவாசு தேவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
தருமபுரி,
தருமபுரி கோட்டை வரலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவிலில் ஸ்வஸ்தி ஸ்ரீ சோப கிருது வருடம் சித்திரை மாதம் 28 -ம் நாள் முதல் வரதராஜ பெருமாளுக்கு வெட்டிவேர் பந்தல் அமைத்து சுகந்த பரிமல திவ்ய வஸ்துக்களுடன் வசந்த உற்சவ விழா தொடங்கியது.
இந்நிலையில் கடைசி நாளான நேற்று வர மகாலட்சுமி சமேத பரவாசு தேவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் வசந்த உற்சவ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.