உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி-ஊட்டி சாலையில் விறுவிறுப்படைந்த சாலை விரிவாக்க பணி

Published On 2023-01-25 09:25 GMT   |   Update On 2023-01-25 09:25 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
  • கோத்தகிரி சாலை மார்க்கமாகவே அதிகமாக வந்து செல்கின்றனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமாக விளங்கி வருவது ஊட்டி.

சமவெளிப்பகுதியில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாகவே அதிகமாக வந்து செல்கின்றனர்.

கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலை மிக குறுகலாகவும், சாலையின் குறுக்கே ஆங்காங்கே மரங்கள் வளர்ந்தும்,சாலை ஓரத்தில் மண் சரிவுகள் ஏற்பட்டும் காணப்பட்டு வந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதில் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இதனை சரிசெய்யும் விதமாக கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பெரும்பாலான இடங்களில் சாலை அகலப்படுத்தும் பணியும், வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி இயற்கை அழகை ரசித்து செல்லும் விதமாக இன்டெர் லாக் கற்களை பதிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது.

தற்போது அந்த பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News