உள்ளூர் செய்திகள்

பக்தர்களுக்கு பிரசாதங்களை துரைஆதித்தன் சுவாமிகள் வழங்கினார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ரணகாளியம்மன்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2022-09-27 05:37 GMT   |   Update On 2022-09-27 05:37 GMT
  • ஸ்ரீ வாஸ்தீஸ்வரர் கோவிலில் ரணகாளி அம்மன் மற்றும் பித்ருக்களுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
  • ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் இது போன்ற பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாடிக்கொம்பு:

மகாளய அமாவாசையை முன்னிட்டு தாடிக்கொம்பு அடுத்த அகரம் சுக்காம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வாஸ்தீஸ்வரர் கோவிலில் ரணகாளி அம்மன் மற்றும் பித்ருக்களுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதில் தங்கள் தோஷங்கள் தீரவும், உடல் நலம் வேண்டியும் பக்தர்கள் வழங்கிய பொருட்களை யாகத்தில் போட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ரணகாளி அம்மனுக்கு பூஜை செய்த எலுமிச்சம் பழம் மற்றும் பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீசித்தர் சுக்காம்பட்டி துரை ஆதித்தன்சுவாமிகள் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் இது போன்ற பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News