உள்ளூர் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்கள்.

போடியில் விஜய தசமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-10-25 06:27 GMT   |   Update On 2023-10-25 06:27 GMT
  • ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து பூரண அலங்காரத்தில் மங்கள ரூபிணியாக காட்சி அளித்தார்.
  • அம்மனுக்கு விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

மேலசொக்கநாதபுரம்:

போடியில் விஜய தசமியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

போடி வள்ளுவர் சிலை அருகில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையும் பிரசித்தியும் பெற்ற ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து பூரண அலங்காரத்தில் மங்கள ரூபிணியாக காட்சி அளித்தார். அம்மனுக்கு விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

திருமலாபுரம் அருகே அமைந்துள்ள சவுடாம்பிகை கோவிலில் அம்மனுக்கு அன்னை சாரதாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் உற்சவ அம்மன் சிலைக்கு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டு மகிஷாசூரவர்த்தினியாக சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

போடி அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கும், சிவலிங்கத்திற்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. அம்மன் சிம்மவாகினியாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த கோவிலில் இளம் பெண்களுக்கு சப்த கன்னியர் போல அலங்காரம் செய்யப்பட்டு கன்னிமார்கள் அமரச் செய்து சுமங்கலிப் பெண்கள் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

அனைத்து கோவில்களிலும் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்று வழிபட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News