உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ தட்சிணகாசி காலபைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2023-07-10 13:27 IST   |   Update On 2023-07-10 13:27:00 IST
  • பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
  • தொடர்ந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தட்சணகாசி காசி காலபைரவர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் மாத மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று ஸ்ரீ தட்சிணகாசி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் ராஜ அலங்காரமும் நடைபெறும்.

இதனைக்காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதேபோல் இன்று திங்கட்கிழமை ஆணி மாதம் 25ஆம் நாள் தேய்பிறை அஷ்டமி என்பதால் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம் ஏகாந்த ருத்ர ஹோமம், காலை 8 மணிக்கு கோ பூஜை அஸ்தவ பூஜை, காலை 8.30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி கோவிலை வலம் வருதல், பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று இரவு 10 மணிக்கு 1008 கிலோ மிளகாய் 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடக்கிறது. 64 பைரவர் யாகம் மகா குருதி பூஜை, இரவு 2.30 மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் கோவிலை வலம் வருதல், அதிகாலை 3 மணிஅளவில் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுகிறது.

கலச அபிஷேகம் 8 வகையான பல அபிஷேகங்கள் நடைபெறும். சுவாமிக்கு சத்ரு சம்ஹாரம் அலங்காரம் செய்யப்படும். சதுர்வேத பாராயணம் சிறப்பு தரிசனம் நடைபெறும்.

Tags:    

Similar News