உள்ளூர் செய்திகள்

சேலம் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2022-11-24 14:58 IST   |   Update On 2022-11-24 14:58:00 IST
  • சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
  • இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும்.

சேலம்:

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கோட்டயத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி செகந்திராபாத்-கோட்டயம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07125) வருகிற 27-ந் தேதி மாலை 6.50 மணிக்கு செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 28-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.22 மணிக்கு சேலம் வந்தடையும்.

பின்னர் இங்கிருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் வழியாக இரவு 9 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் கோட்டயம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07126) வருகிற 28-ந் தேதி இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர் வழியாக வருகிற 30-ந் தேதி காலை 4 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News