சந்து கடைகளில் மது விற்பனையை தடுக்க தனிப்படை அமைப்பு
- தருமபுரியில் சட்டவிரோதமாக சந்து கடைகளில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- அதிக போதைக்காக ஊமத்தங்காய் கலந்து விற்று வருவதும் தெரிய வருகிறது.
தருமபுரி மாவட்டம், அரூர், காரிமங்கலம், ்பாலக்கோடு, பாப்பி ரெட்டிப்பட்டி, பாப்பா ரப்பட்டி, நல்லம்பள்ளி, அதிய மான்கோட்டை, தொப்பூர், இண்டூர் ஆகிய போலீஸ் நிலை யத்துக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சந்து கடை அமைத்து அதன் மூலம் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மதுவிற்பனை படுஜேராக நடந்து வந்தது.
இதனை யடுத்து தொடர்ந்து புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன்ஜேசு பாதம் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்ட விரோத மது விற்ப னையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;-
தருமபுரி மாவட்டத்தில் சில இடங்களில் மீண்டும் சந்து கடைகளில் மது விற்பனையும், கிராமங்களில் மறைவான இடத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் சிலரின் ஆதரவோடு மீண்டும் சந்துக்கடைகளில் மது விற்பனையானகிறது.
கிரா மங்களின் பெட்டி கடைகள், சாலையோர கடைகளிலும் பகிரங்கமாக நடந்து வருகிறது. சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் சிலர் போலியாக மதுவை தயாரித்து அதில் அதிக போதைக்காக ஊமத்தங்காய் கலந்து விற்று வருவதும் தெரிய வருகிறது.
இந்த மதுவை வாங்கி அருந்தும் நபர்களுக்கு வயிற்று கோளாறு மற்றும் முச்சு திணறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது சில சமயங்களில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமான நிலையை உருவாக்கும். ஆகவே போலீசார் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இது குறித்த புகார் மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களிடம் சென்றது. இதனையடுத்து தனது தலைமையில் தனிப்படை அமைத்துள்ளார். அந்த தனிப்படை போலீசார் தருமபுரி நகரத்தில் சந்துகடைகளில் மது விற்ப னையில் ஈடுபடுவோர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர்.
அதே போன்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிரடி ரெய்டுகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.