உள்ளூர் செய்திகள்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தியேட்டரில் சிறப்பு காட்சி

Published On 2022-12-03 09:22 GMT   |   Update On 2022-12-03 09:22 GMT
  • வண்ணார்பேட்டையில் ஒரு திரையரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு காட்சி சினிமா இலவசமாக பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • சிறப்பு காட்சியை பயிற்சி கலெக்டர் கோகுல் தொடங்கி வைத்தார்.

நெல்லை:

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று பாளை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு காட்சி சினிமா இலவசமாக பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி தியேட்டரில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறப்பு காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை பயிற்சி கலெக்டர் கோகுல் தொடங்கி வைத்தார். அவர் மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் அமர்ந்து படத்தை பார்த்தார்.

இதில் பார்வையற்றோர், காது மற்றும் வாய் பேச முடியாத, ஊனமுற்றோர் என ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு சினிமாவை பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய மாற்றுத்திறனாளியான உதவி கலெக்டர் கோகுல், மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News