உள்ளூர் செய்திகள்

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தருமபுரியில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-08-26 15:34 IST   |   Update On 2023-08-26 15:34:00 IST
  • காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.
  • சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

தருமபுரி,

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தருமபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெரு மகாமாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தருமபுரி அரசு மருத்துவ மனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.பின்னர் அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News