உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
பழனி கோவில் உற்சவருக்கு நாளை சிறப்பு பூஜைகள்
- பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
- சின்னக்கு மாரருக்கு கலசாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
பழனி:
பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மலைக்கோவில் உற்சவர் சின்னக்குமாரருக்கு இன்று (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, கலாகர்ஷணம், ஜடிபந்தனம் ஆகியவை நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சின்னக்கு மாரருக்கு கலசாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. எனவே நாளை மதியம் 1.30 மணி வரை உற்சவர் சிலைக்கு உபய அபிஷேகங்கள் நடைபெறாது.
உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 1.30 மணிக்கு மேல் உபய அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.