உள்ளூர் செய்திகள்
மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களது உடல்களில் உள்ள நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.
- தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ் ஆலோசனை யின் படி ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் சிறப்பு மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்கு நகர் நல அலுவலர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் சுரேஷ், துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட் டேவிட் பால், பழனிச்சாமி ஆகியோர் முன்னில வைக்கத்தனர். 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களது உடல்களில் உள்ள நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றனர். மருத்துவர் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.