உள்ளூர் செய்திகள்

நாமக்கல் நகராட்சியில் தொழில் உரிமம் பெற சிறப்பு முகாம்

Published On 2023-01-02 05:48 GMT   |   Update On 2023-01-02 05:48 GMT
  • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
  • நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரும் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுவரை தொழில் உரிமம் பெறாதவர்கள் உரிய ஆவணங்களாக, வாடகைதாரர் என்றால் கடை வாடகை ஒப்பந்த நகல், கட்டிட உரிமையாளர் ஒப்புதல் கடிதம், சொத்துவரி ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையும் ஜி.எஸ்.டி உரிமம் எண், வணிக நிறுவன முகவரி சான்று, ஆதார் அல்லது ரேசன் அட்டை ஆகியவற்றுடன் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரும் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

ஜி.எஸ்.டி உரிமம் இல்லாத வணிகர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி ரசீது அவசியம் தேவை என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News