உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம்- திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்

Published On 2022-11-12 10:26 GMT   |   Update On 2022-11-12 10:26 GMT
  • புகைப்படத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கலாம்.
  • வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது :-

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 9-ந் தேதி வெளியி டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சா வடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக அடுத்த மாதம் 26 ஆம் தேதி வரை வைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பொது மக்களின் வசதிக்காக இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதேபோல் நாளை (ஞாயிற்று கிழமை) மற்றும் 26-11-2022 (சனிக் கிழமை), 27-11-2022 (ஞாயிற்றுகிழமை) ஆகிய நாட்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இச்சிறப்பு முகாமில் 1.1.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 1.1.2005 அன்று அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ அருகாமையிலுள்ள வாக்குச்சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்த வர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 ஐ பூர்த்தி செய்தும், அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8 -ஐ பூர்த்தி செய்தும், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் வாக்காளர்கள் படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்தும் வழங்கலாம் .

பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 9.30 மணி மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பி க்கலாம்.

அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.

மேலும், நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Voters Help Line என்ற Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News