நலத்திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்த காட்சி. அருகில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்ளார்.
ராதாபுரம் யூனியனில் நலத்திட்ட பணிகள் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
- ராதாபுரம் யூனியனில் நலத்திட்ட பணிகள் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
- நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய மளிகை தொகுப்பை வழங்கினார்.
வள்ளியூர்:
ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சிதம்பரபுரம் ஊராட்சியில் புதிய ரேசன் கடை, அங்கன்வாடி மையம் திறத்தல், அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்குதல் போன்ற நலத்திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்பு பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய மளிகை தொகுப்பை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, சிதம்பரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன், ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன், சிதம்பரபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் முருகன், ராதாபுரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அரவிந்தன், உதயத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், கவுன்சிலர் முருகன், நவ்வலடி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.