உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு எஸ்.பி. நிஷா நிவாரண உதவி வழங்கினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு எஸ்.பி. நிவாரண உதவி வழங்கல்

Published On 2022-08-17 08:03 GMT   |   Update On 2022-08-17 08:03 GMT
  • ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினார்.
  • தனியார் பள்ளியில் படித்தாலும் அரசு பள்ளியில் படித்தாலும் முயற்சி செய்து படித்தால் தான் முதலிடத்தில் வரலாம்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள திட்டுகிராமம் ஆகும். இந்த கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து தற்போது வடிந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் இங்கு இயங்கி வந்த அரசு உயர்நிலை பள்ளிக்கு கடந்த 10 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று முதல் பள்ளி திறக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறை எஸ்பி நிஷா முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலை பள்ளிக்கு வந்து பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினார்.

தொடர்ந்து மாணவருக்கு எஸ் பி நிஷா வினாடி, வினா நடத்தி அதில் முதல் 2 இடத்தில் வெற்றி பெற்ற மாணவருக்கு செஸ்போர்டு பரிசாக வழங்கினார். அவர் மாணவர்களிடம் பேசுகையில் 50 வருடங்களுக்கு முன்பு பெண் அதிகாரிகள் கலெக்டராக எஸ் பி யாக இருக்க முடியுமா என்று நம்மால் யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாது. இன்று எல்லா இடங்களிலும் பெண் அதிகாரிகள் வந்துள்ளார்கள். நம் மாவட்டத்தில் பெண் கலெக்டர், பெண்எஸ்பி, ஆர்.டி.ஓ.வும் பெண் பெண்ணாக இருக்கிறார்.

மாணவர்கள் எல்லோரும் சொந்தமாக முயற்சி செய்ய வேண்டும். யாரையும் சார்ந்து இருக்க கூடாது நான் வெற்றி பெறுவேன் என்ற முடிவெடுக்க வேண்டும். தனியார் பள்ளியில் படித்தாலும் அரசு பள்ளியில் படித்தாலும் முயற்சி செய்து படித்தால் முதல் இடத்தில் வரலாம்.

அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள திறமையை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் அனைவரும் தினந்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும் என்றார். சீர்காழி டி.எஸ்.பி பழனிச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூவராகவன், விவசாய சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ் லோகநாதன் மற்றும் போலீசார் பெற்றோர் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News