உள்ளூர் செய்திகள்

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் குறைந்துள்ளதை படத்தில் காணலாம்


சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 88 அடியாக சரிவு

Published On 2022-06-08 04:46 GMT   |   Update On 2022-06-08 04:46 GMT
  • நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
  • 126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 88 அடியாக சரிவு

பெரியகுளம் :

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது சோத்துப்பாறை அணை. 126.28 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் பெரியகுளம், தாமரைக்குளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேலும் பெரியகுளம் நகரில் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 87.74 அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் குடிநீருக்காக 6 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் குறைந்து வருவதால் குறிப்பிட்ட தேதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. மழை கைகொடுத்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்பதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 131.85 அடியாக உள்ளது. 137 கனஅடிநீர் வருகிறது. 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 60.37 அடியாக உள்ளது. வரத்து இல்லை. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 969 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.20 அடியாக உள்ளது. 47 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

Tags:    

Similar News