உள்ளூர் செய்திகள்

சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்


செங்கோட்டை குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா - கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-10-27 08:29 GMT   |   Update On 2022-10-27 08:29 GMT
  • விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்
  • 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும்.

செங்கோட்டை:

செங்கோட்டை குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும். விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும், 29-ந் தேதி திருமலை குமரன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவில் யானை சூரன் முகம், சிங்க சூரன், மகா சூரன் முகம் காட்டும் வைபோகம் நடைபெறும்.

வருகிற 30-ந் தேதி மதியம் 2.00 மணிக்கு முருக பெருமாள் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு முக்கிய ரத வீதிகளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பத்கர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்படும். 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News