உள்ளூர் செய்திகள்

இருளர், பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 250 குடும்பங்களுக்கு இருளர்-ஆதியன்குடி இன சாதி சான்றிதழ்- கலெக்டர் தகவல்

Published On 2022-10-30 09:56 GMT   |   Update On 2022-10-30 09:56 GMT
  • 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை.
  • இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் தமிழக அரசு மூலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர், பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீடு, வீடாக சென்று வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் ஆதியன்குடி என்ற பழங்குடி இன மக்களும் வசித்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தமிழக அரசு பழங்குடி இன மக்களுக்கானசாதி சான்றிதழ்களைவழங்கி வருகிறது.

அதனை த்தொடர்ந்து மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசித்து வரும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கி உள்ளோம்.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை, 250 குடும்பங்களுக்கு இருளர் மற்றும் ஆதியன்குடி சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார மேம்பா ட்டிற்காக இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் தமிழக அரசு மூலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கும்பகோ ணம் கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரிய நாராய ணன், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News