உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.


சிவகிரி பேரூராட்சி கூட்டம்

Published On 2022-06-30 14:53 IST   |   Update On 2022-06-30 14:53:00 IST
  • சிவகிரி பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலையத்தில் பழுது அடைந்துள்ள பழைய கட்டிடங்களிலுள்ள பராமரிப்பு பணியை சீரமைக்க தீர்மானம்.
  • கூட்டத்தில் 18 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

சிவகிரி தேர்வுநிலை பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் லட்சுமி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள மண் தரையாக உள்ள ரோடுகளை தார் சாலையாகவும் மற்றும் பேவர் பிளாக், வாறுகால் வசதி, சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது எனவும், இதனை வரும் நிதியாண்டில் பணிகள் முழுவதும் செய்து முடிப்பது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

சிவகிரி பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலையத்தில் பழுது அடைந்துள்ள பழைய கட்டிடங்களிலுள்ள பராமரிப்பு பணியை சீரமைப்பது எனவும், பஸ் நிலையத்தின் கீழ்புறம் பயணிகளின் நலனுக்காக நிழற்குடை அமைப்பது எனவும், பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் சுற்றி வரக்கூடிய தரைப்பகுதி குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை அகற்றி சீரான பாதையாக அமைப்பது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் 18 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News