உள்ளூர் செய்திகள்

இருப்பிடம் திரும்பிய வீர அழகருக்கு வரவேற்பு

Published On 2023-05-10 07:44 GMT   |   Update On 2023-05-10 07:44 GMT
  • இருப்பிடம் திரும்பிய வீர அழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று தென்கிழக்கு பகுதியில் வீர அழகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 1-ந்தேதி தொடங்கிய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் 5-ந்தேதி வீர அழகர் இறங்கினார்.

அதைதொடர்ந்து கிராமத்தார் மண்டகப்படி, கோர்ட்டார் மண்டகப்படி, கடைதெரு மண்டகப் படிகளில் எழுந்தருளி கருட வாகனம் மற்றும் பல்லக்கில் மானாமதுரையில் உள்ள பல்வேறு பகுதிக்கு சென்று வீர அழகர் கோவிலுக்கு திரும்பினார்.

இந்த விழாவில் முதல்நாளில் வீர அழகர் நகராட்சி அலுவலகம், ஆற்றில் இறங்குவதற்கு முன்பு போலீஸ் நிலையம், ஆற்றில் இறங்கும் அன்று சார்-குற்றவியல் நீதிமன்றம் சார்பில் நடைபெறும் கோர்ட்டார் மண்டகப்படி, அதை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மெயின் கடைவீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அரசுஅலுவலகத்திற்கு வீரஅழகர் வரும்போது நகராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை அதிகாரிகள் வீர அழகரை வணங்கி வரவேற்பு கொடுத்தனர். சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.

Tags:    

Similar News