உள்ளூர் செய்திகள்

வேலுநாச்சியாரின் இசை, நாடக விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்ளார்.

வேலுநாச்சியாரின் இசை நாடக விழா 30-ந் தேதி நடக்கிறது

Published On 2022-08-23 14:03 IST   |   Update On 2022-08-23 14:03:00 IST
  • வேலுநாச்சியாரின் இசை நாடக விழா 30-ந் தேதி நடக்கிறது.
  • பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு களிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவகங்கை

சிவகங்கை அரண்மனை வளாகத்தில் வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வீரமங்கை வேலு நாச்சியாரின் இசை நாடக விழா நடைபெற உள்ளது.

இதற்கான முன்னே ற்பாடு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்தும் வீரர்களின் தியாகம், போராட்டம் போன்றவைகள் குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக அரசின் சார்பில் வரலாற்று சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாறு குறித்து இசை சார்ந்த நடன நாடகத்ைத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக ஈரோடு, திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் நிறைவாக சிவகங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த வீரமங்கை வேலுநாச்சியாரின் இசை நாடகம் வருகிற 30-ந் தேதி வேலுநாச்சியர் வாழ்ந்த அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்வின் தியாகத்தையும், தமிழ் பற்றையும், வெளிக்கொணர்வதில் முதலமைச்சருக்கு நிகர் எவரும் இல்லை. இந்த விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு களிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இளைய தலைமுறை யினரான எதிர்காலச் சந்ததியினர் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில், சுதந்திரப் போராட்டத்தில் வீரப்பெண்மணியாக திகழ்ந்து, அனைத்துப் பெண்களுக்கும் முன்னோ டியாக திகழ்ந்து வருவது குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், நடத்தப்படும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த இசை நாடகத்தை அனைவரும் கண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டர் மதுசூதன்ரெட்டி, கோட்டாட்சியர் சுகிதா, முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, நகர்மன்றப் பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், உதவி செயற் பொறியாளர் பெருமாள்சாமி, வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News