உள்ளூர் செய்திகள்

திருவேங்கடமுடையான் கோவில் வைகாசி பெருந்திருவிழா.

வைகாசி பெருந்திருவிழா

Published On 2022-06-07 15:22 IST   |   Update On 2022-06-07 15:22:00 IST
  • சிவகங்கை கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • வருகிற 11-ந் தேதி திருக்கல்யாணமும், 14-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவல் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டிற்கான வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடிமரத்திற்கு முன்பு சிறப்பு அலஙகாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவேங்கடமுடையான் எழுந்தருளினார்.கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார்.

வருகிற 11-ந் தேதி திருக்கல்யாணமும், 14-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடாசலம் செட்டியார் தலைமையில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News