உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது.

அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வலியுறுத்தல்

Published On 2023-07-04 07:37 GMT   |   Update On 2023-07-04 07:37 GMT
  • திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
  • ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தப்பட்டது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் அருள் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணபாஸ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ரமேஷ் பிரசாத் வரவேற்றார்.

உதவியாளர் மாணிக்க ராஜ் செலவு கணக்கு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனா வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், சகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் கவுன்சிலர்கள் ராமசாமி, பழனியப்பன், கலைமாமணி ஆகியோர் பேசியதாவது:-

வேலங்குடி ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் போர் போடப்பட்டு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கடங்கண்மாய் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கவுன்சிலர்களின் பெயர்களை இடம்பெற செய்ய வேண்டும். பொது மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிைறவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் மற்றும் சேர்மன் ஆகியோர் உறுதி கூறினர்.

Tags:    

Similar News